பிள்ளையானுக்கு கொடுக்கப்பட்ட புதிய பதவி...!

Report Print Rusath in அரசியல்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் முன்னிலையில் சிவநேசதுரை சந்திரகாந்தன் பதவியை பொறுப்பேற்றுக்கொண்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் கடந்த 2015 ஒக்டோபர் 11 திகதி கைது செய்யப்பட்டு 4 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்ற நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவானார் என்பது குறிப்பிடத்தக்கது.