20வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற மக்கள் பெரும்பான்மை பலத்தை வழங்கியுள்ளனர்

Report Print Steephen Steephen in அரசியல்

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி 19வது அரசியலமைப்புச் சட்டத்தை நீக்க மக்கள் அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்கி இருப்பதாக ராஜாங்க அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அரசாங்கத்திற்கு மக்கள் வழங்கியுள்ள ஆணையை புறந்தள்ள முடியாது. அரசாங்கம் மக்களின் ஆணைக்கு அமைய செயற்படும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை வலுப்படுத்தவே 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அத்துடன் ராஜபக்சவினரை அரசியலில் இருந்து ஒதுக்கி வைக்க 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ராஜபக்சவினரை அரசியலில் இருந்து ஒதுக்கி வைக்க கடந்த அரசாங்கம் முயற்சித்த போதிலும் நாட்டில் வாழும் பெரும்பான்மை மக்கள் ராஜபக்சவினர் மீது தொடர்ந்தும் நம்பிக்கை வைத்துள்ளனர். ராஜபக்சவினர் நாட்டுக்கு எதிராக செயற்பட மாட்டார்கள் எனவும் மகிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.