கோப் குழுவின் தலைவராக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நியமிப்பு

Report Print Steephen Steephen in அரசியல்

9வது நாடாளுமன்றத்தின் பொது நிறுவனங்கள் (கோப்) தொடர்பான தெரிவுக்குழுவின் தலைவராக ஆளும் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் கூட்டம் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றதுடன் இதன் போது அந்த குழுவின் தலைவராக சரித ஹேரத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கோப் குழுவின் தலைவராக எதிர்க்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரை நியமிக்குமாறு எதிர்க்கட்சிகள் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தன.

எனினும் அரசாங்கம், ஆளும் கட்சியை சேர்ந்த ஒருவரையே தலைவராக நியமித்துள்ளது. கடந்த நல்லாட்சி அரசாங்கம் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தியை கோப் குழுவின் தலைவராக நியமித்திருந்தது.