20வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

Report Print Steephen Steephen in அரசியல்

அரசாங்கம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட வரைவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த திருத்தச் சட்டத்தின் மூலம் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதால், அதனை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் அனுமதி பெற வேண்டும் என உத்தரவிடுமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணி தர்ஷன வேரதுவகே ஊடாக சட்டத்தரணி இந்திக கால்லகே இந்த அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளார். மனுவில் பிரதிவாதியாக சட்டமா அதிபர் குறிப்பிடப்பட்டுள்ளார்.