20 ஐ ஆதரிப்பவர்கள் எதிர்காலத்தில் அதற்காக மன்னிப்புக் கோருவார்கள்

Report Print Rakesh in அரசியல்

அரசமைப்பின் 20வது திருத்தத்துக்கு ஆதரவளிக்கும் மக்கள் பிரதிநிதிகள் எதிர்காலத்தில் அதற்காக மக்களிடம் மன்னிப்புக் கோருவார்கள் என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

20வது திருத்தத்தால் முதலில் பாதிக்கப்படப் போகின்றவர்கள் அமைச்சர்களும். நாடாளுமன்ற உறுப்பினர்களுமே எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரசமைப்பின் 20வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் அதற்காகக் கவலைப்படுவார்கள்.

ஓரிரு வருடங்களில் பொதுமக்களிடம் அதற்காக மன்னிப்பு கோருவார்கள். ஜனாதிபதியின் நடவடிக்கைகளால் பாதிக்கப்படும் போது அரசு தவறுக்காக வருந்தும்” என்றார்.