20வது திருத்தச் சட்டத்தால் பிரதமர் அலுவலக உதவியாளர் போல் மாறிவிடுவார் - லக்ஷ்மன் கிரியெல்ல

Report Print Steephen Steephen in அரசியல்
117Shares

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் பிரதமர் அலுவலக உதவியாளர் நிலைக்கு மாற்றப்படுவார் எனவும் அதற்கு இடமளிக்க முடியாது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நாடாளுமன்றதில் சமர்பிக்கப்படும் போது எமக்கு 42 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே இருந்தனர். 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் முன்னர் அன்று அது குறித்து எதிர்க்கட்சிகளுடன் 6 சுற்று கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. இதன் பின்னர் இணக்கப்பாட்டுக்கு வந்தோம். அப்போது நீங்கள் இணக்கப்பாட்டுக்கு வந்த காரணத்தினாலேயே நாங்கள் 19வது திருத்தச் சட்டத்தை கொண்டு வந்தோம்.

தற்போது 20வது திருத்தச் சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் எந்த கலந்துரையாடல்களும் நடத்தப்படவில்லை. 20வது திருத்தச் சட்டம் தொடர்பாக பிரதமர் குழு ஒன்றை நியமித்திருந்தார். எனினும் எதிர்க்கட்சிகளுடன் எந்த கலந்துரையாடல்களும் இல்லை. எந்த திருத்தங்களும் இல்லை. 19வது திருத்தச் சட்டத்தை நாங்கள் கொண்டு வந்த போது பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்திய பின்னர் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தில் அதனை நிறைவேற்றினோம்.

இந்த 20வது திருத்தச் சட்டத்தை அவசரமாக கொண்டு வந்து நாடாளுமன்றத்திற்கு இருக்கும் அதிகாரங்களை முற்றாக இல்லாமல் செய்ய முயற்சிக்கின்றனர். பிரதமர் அலுவலக உதவியாளர் போல் மாறுவார். நாடாளுமன்றத்திற்கு அதிகாரங்கள் எதுவும் இல்லாமல் போகும். நாடாளுமன்றத்தை ஒரு வருடத்திற்கு ஒரு முறை கலைக்க முடியும் என்ன இது?. 20வது திருத்தச் சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த சந்தர்ப்பத்தை கோருவதாகவும் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.