20க்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த ஐ.மக்கள் சக்தி

Report Print Steephen Steephen in அரசியல்

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட வரைவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.

இந்த திருத்தச் சட்ட வரைவு அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி, அதனை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என உத்தரவிடுமாறு மனுவில் கோரியுள்ளது.

இந்த மனுவுடன் 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட வரைவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஏற்கனவே சட்டத்தரணி ஒருவர் 20வது திருத்தச் சட்ட வரைவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்கள் தொடர்பாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னரே 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட வரைவு தொடர்பான இரண்டாம் முறை வாசிப்பு ஆரம்பிக்கப்படும். இதற்காக 21 நாட்கள் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.