அரச நிறுவனத்திற்கு எதிராக பொதுமகனின் முறைப்பாடு! ஜனாதிபதியின் திடீர் நடவடிக்கை

Report Print Vethu Vethu in அரசியல்

நாராஹென்பிட்டியிலுள்ள வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

பொதுமகன் ஒருவர் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய ஜனாதிபதி இவ்வாறு வீடமைப்பு அபிவித்தி அதிகாரசபைக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

தேவையின் நிமித்தம் பலமுறை அங்கு சபைக்கு சென்ற போதிலும் அதனை நிறைவேற்றுவதற்கு தவறியுள்ளதாகவும், ஊழியர்கள் போதுமானதல்ல எனவும் கூறி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி, வீடமைப்பு அலுவலகத்தை மேற்பார்வையிடப்பட்டு, அங்கு போதுமான ஊழியர்கள் இருப்பதைக் காண முடிவதாக குறிப்பிட்டுள்ளார்.

சேவை பெறுவதற்கும் வரும் ஊனமுற்ற நபர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் அவர்களை சிரமத்திற்குள்ளாக்காமல் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பொது மக்களின் அவசியமான செயற்பாடு மற்றும் கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றுவது அரச ஊழியர்களின் முதன்மை கடமையாகும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.