திலீபனின் நினைவு நாள் தொடர்பில் அரசுடன் இணைந்துள்ள தமிழ் கட்சிகளிற்கு பகிரங்க சவால்

Report Print Banu in அரசியல்

கடந்த காலங்களில் பயங்கரவாத நடவடிக்கைகளில் இறந்தவர்களை அஞ்சலிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இடைக்கால தடைவிதித்திருப்பது எமக்கு மனவேதனையை அளிக்கின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.

தியாகி திலீபனின் நினைவேந்தல் தொடர்பில் அவர் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இறந்தவர்களை நினைவு கூருவது இந்து மதத்திலும், தமிழர் பண்பாட்டிலும் முக்கியமானதொன்றாக காணப்படுகின்றது.

அதற்கு அரசாங்கம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பைத்திருப்பது வேதனையளிக்கின்றது.இதன் மூலம் நாட்டில் ஜனநாயகம் மெளனிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.