பொது நிறுவனங்கள் தொடர்பான அமர்வுகளில் ஊடகங்களுக்கு தொடர்ந்தும் அனுமதி!

Report Print Ajith Ajith in அரசியல்

பொதுக்கணக்குகள் தொடர்பான நாடாளுமன்றக்குழுவின் அமர்வுகளில் ஊடகங்கள் தொடர்ந்தும் அனுமதிக்கப்படும் என்று கோபா என்ற பொதுக்கணக்குகள் குழுவின் தலைவரான திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வரப்பிரசாதங்களின் அடிப்படையில் இந்த அனுமதி தொடர்ந்தும் வழங்கப்படும் என்று கோபாவுக்கான புதிய தலைவராக நியமிக்கப்பட்ட அவர் இன்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக பொது நிறுவனங்கள் தொடர்பான அமர்வுகளுக்கு ஊடகங்கள் தொடர்ந்தும் அனுமதிக்கப்படாது என்று ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.

எனினும் அவ்வாறான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்று கோப் குழுவின் தலைவரான சரித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.