யாழில் சிறிகாந்தாவிடம் பொலிஸார் தீவிர விசாரணை

Report Print Jeslin Jeslin in அரசியல்
824Shares

தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என். சிறிகாந்தாவிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தியாகி திலீபன் நினைகூரலை தடைசெய்யக் கோரி பொலிஸார் தாக்கல்செய்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, திலீபனின் நினைவுகூரல் நிகழ்வுகளுக்கு தடைத் விதித்து யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த சூழ்நிலையில், பத்து தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்று கூடி இன்றையதினம் ஊடக சந்திப்பை மேற்கொண்டிருந்தன.

இந்த நிலையில் குறித்த சந்திப்பை அடுத்து மண்டபத்திற்குள் நுழைந்த பொலிஸார் சிறிகாந்தாவிடம் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.