மன்னார் மக்களின் அபிவிருத்திக்காக விசேட நிதி ஒதுக்க வேண்டும் : வினோ நோகராதலிங்கம்

Report Print Banu in அரசியல்
20Shares

மன்னார் மாவட்ட மக்களின் வாழ்க்கைத்தரத்தை அபிவிருத்தியினூடாக உயர்த்துவதற்காக விசேட நிதி ஒதுக்கீடுகளை அரசாங்கம் வழங்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு திட்டம் வடக்கு ,கிழக்குப் பகுதிகளில் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அரசியல் தலையீடுகள் காரணமாகவே ஜனாதிபதியால் இவை இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

வடக்கு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளால் மக்கள் பாரிய அசெளகரியங்களுக்கு உள்ளாகின்றனர் என்றும் கூறியுள்ளார்.