200 மெய்ப் பாதுகாவலர்களுடன் ரணில்!

Report Print Vethu Vethu in அரசியல்

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தற்போது 200 பாதுகாவலர்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்துள்ளார்.

எனினும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு 70 பாதுகாவலர்கள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் மேலும் சிலரை குறைக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர்களுக்கு பாரியளவு பாதுகாவாலர்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இது மிகவும் நியாயமற்ற செயற்பாடு என நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார்.