அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் சிங்கள தேசிய அமைப்புகள் அதிருப்தியில்

Report Print Steephen Steephen in அரசியல்

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட வரைவில் அரசாங்கம் செய்ய உள்ளதாக கூறும் கட்டாயம் செய்யப்படும் என்ற உறுதிமொழியை வழங்க வேண்டும் என சிங்கள தேசிய அமைப்புகள் ஒன்றியத்தின் பிரதிநிதி மருத்துவர் வசந்த பண்டார கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசாங்கம் மேற்கொள்ள உள்ளதாக கூறும் திருத்தங்களை நாடாளுமன்ற விவாதத்திற்கு முன்னர் மறைக்காமல் பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் மருத்துவர் வசந்த பண்டார இதனை கூறியுள்ளார்.

உண்மையில் 19வது திருத்தச் சட்டத்தின் நோக்கத்தை புரிந்துக்கொள்ளாமல், எமக்கு 20வது திருத்தச் சட்டம் பற்றி பேச முடியாது.

ராஜபக்ச குடும்பத்தை வீழ்த்தி, ரணில் விக்ரமசிங்கவுக்கு நிறைவேற்று அதிகாரத்தை வழங்கி, நாட்டை அடிப்படைவாத,பிரிவினைவாத சக்திகளின் பிடிக்குள் சிக்க வைத்து, நாட்டை ஸ்திரமற்ற நிலைமைக்கு கொண்டு செல்வதே 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் அடிப்படை நோக்கம்.

இரண்டாவது நோக்கத்தை நிறைவேற்ற முடியாமல் போனது. எனினும் இறுதி நோக்கத்தை அவர்கள் நிறைவேற்றிக்கொண்டனர். முதலாவது நோக்கத்தை நிறைவேற்ற அவர்கள் 20வது திருத்தச் சட்ட யோசனையை அடிப்படை யோசனையாக முன்வைத்தனர். அது தேர்தல் முறை திருத்தம் சம்பந்தமான 20வது திருத்தச் சட்டம் என அப்போது கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போதைய அரசாங்கம் தூரநோக்கின்றி, மக்கள் வழங்கிய ஆணையின் ஆத்மா பழுதுப்படும் விதத்தில் செயற்பட்டு வருகிறது. சிறந்தவற்றை வைத்துக்கொண்டு கூடாத விடயங்களை நீக்கினால் தற்போதைய பிரச்சினை ஏற்பட்டிருக்காது. இதனை எதிர்க்கட்சிகள் போன்று ஆளும் கட்சியின் தரப்புகளும் எதிர்க்கின்றனர் என வசந்த பண்டார குறிப்பிட்டுள்ளார்.