முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பொறுப்பை தவறவிட்டார்! ருவான் விஜேவர்தன

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தடுக்கும் பொறுப்பை தவறவிட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று சாட்சியமளித்த பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் முன்னாள் ஜனாதிபதி ஈஸ்டர் தாக்குதல் நடப்பதற்கு முன் வெளிநாட்டுக்கு சென்று தனது பொறுப்பை தவறவிட்டார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் என்பது பதவி மாத்திரமே. வர்த்தமானி அறிவித்தல் மூலம் எனக்கு வழங்கப்பட்டிருந்த நிறுவனங்களுக்கு அமையவே வேலை செய்தேன்.

ரணவிரு அதிகாரசபை, பாதுகாப்பு பாடசாலை மற்றும் பாதுகாப்பு கல்லூரி என்பனவே எனது பொறுப்பின் கீழ் இருந்தன. பொலிஸ், புலனாய்வு பிரிவுகள், முப்படை என்பன எனது கட்டுப்பாட்டின் கீழ் இருக்கவில்லை.

இதனால், நாட்டின் தேசிய பாதுகாப்பு எனது பொறுப்பின் கீழ் இருந்தது என்று நான் கூற முடியாது. இரண்டாவது இடத்தில் இருந்தேன்.

இந்த துறைகள் பாதுகாப்பு அமைச்சரின் பொறுப்பின் கீழ் இருந்தன. தேசிய பாதுகாப்பு முன்னாள் ஜனாதிபதியின் பொறுப்பின் கீழ் இருந்தது.

முன்னாள் ஜனாதிபதி அந்த சந்தர்ப்பத்தில் வெளிநாடு சென்று தனது பொறுப்பை சரியாக செய்யவில்லை என்றே நான் நினைக்கின்றேன் எனவும் ருவான் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.