1978ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் ஜே.ஆர். நாட்டை மயானமாக மாற்றினார்! பிமல் ரத்நாயக்க

Report Print Steephen Steephen in அரசியல்

20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் என்பது ஒரு பிசாசு பயணம் என மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல - பெலவத்தையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில்,

20ஆவது திருத்தச் சட்டத்தை உருவாக்கியது யார் என்பதை கூற எவரும் முன்வரவில்லை. அவர்களுக்கு இதில் இருக்கும் பயங்கரமான நிலைமை தெரியும்.

1978ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் கடுமையான ஆட்சியாளரான ஜே.ஆர்.ஜெயவர்தன முழு நாட்டையும் மயானமாக மாற்றினார்.

மக்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கி நாடாளுமன்றத்தை கொலை செய்துள்ளனர்.

20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் ஊடாக அரசாங்கம் மீதமுள்ள நிறுவனங்களை கொலை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.