எம்.பிக்கள் கட்சி தாவுவது குறித்து ஹக்கீம் அலட்டிக்கொள்ளவில்லை - தூதரகமொன்றுக்குக் கசிந்துள்ள தகவல்

Report Print Rakesh in அரசியல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்கள், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசுடன் இணையவுள்ளனர் என்று கூறப்படும் தகவல்கள் தொடர்பில் கட்சியின் தலைவரான ரவூப் ஹக்கீம் அலட்டிக்கொள்ளவில்லை எனத் தெரியவந்துள்ளது.

இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்தத் துடிக்கும் உலக வல்லரசு நாடொன்றின் இலங்கையிலுள்ள தூதரகமொன்றுக்கு மேற்படித் தகவல் கிட்டியுள்ளது எனவும் அறியமுடிந்தது.

தூதரகத்தின் தகவல் பிரிவுக்கு இந்தத் தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது என அங்கு கடமையாற்றும் அதிகாரி ஒருவர் உறுதிபடச் சுட்டிக்காட்டியுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

அவரது தகவல்களின்படி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் ஹக்கீம் உட்பட 5 எம்.பிக்கள் உள்ளனர். இவர்களில் 4 எம்.பிக்கள் அரசுடன் இணைந்து கொண்டாலும் ஹக்கீம் அது தொடர்பில் அலட்டிக்கொள்ளவே இல்லையாம்.

அரசுடன் இணைவதென்றால் தாராளமாக இணைந்துகொள்ளட்டும் எனக் கட்சித் தலைவரான ரவூப் ஹக்கீம் கருத்து வெளியிட்டுள்ளார் எனத் தூதரகத்துக்குக் கிடைக்கப்பெற்றுள்ள

இரகசியத் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது என மேற்படி அதிகாரி கூறியுள்ளார். "எவர் வேண்டுமானாலும் அரசுடன் இணையட்டும். ஆனால், நானும் கட்சியும் அப்பிடியேதான் இருப்போம்" என்று ஹக்கீம் கூறியுள்ளார் எனவும் தூதரகத்துக்குக் கிடைக்கப்பெற்றுள்ள அந்த இரகசியக் குறிப்பில் காணப்படுகின்றது எனவும் அறியமுடிந்தது.