20வது திருத்தச் சட்டத்தை ஆதரிப்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை - சுதந்திரக் கட்சி

Report Print Steephen Steephen in அரசியல்

நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள 20வது திருத்தச் சட்ட வரைவில் உள்ள நன்மை தீமைகள் குறித்து கலந்துரையாடிய பின்னரே அந்த திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

கட்சி என்ற வகையில் கலந்துரையாடி அந்த திருத்தச் சட்டத்தை ஆராய்ந்து விளக்கத்தை முன்வைக்க உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வீரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இந்த திருத்தச் சட்டத்தின் ஊடாக 19வது திருத்தச் சட்டத்தில் உள்ள பலவீமான பகுதிகள் நீக்கப்பட்டு அதில் உள்ள நல்ல விடயங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். 19வது திருத்தச் சட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள சுயாதீன ஆணைக்குழுக்களின் தொழிநுட்ப ரீதியான பிரச்சினைகளை சரி செய்ய வேண்டும் எனவும் வீரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.