பணிகளை செய்ய இடமளிப்பதில்லை: பிரதமரிடம் முறைப்பாடு செய்த ராஜாங்க அமைச்சர்

Report Print Steephen Steephen in அரசியல்

தொழில் அமைச்சில் உள்ள உயர் அதிகாரிகள் தனது பணி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல இடமளிப்பதில்லை என வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு ராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன முறைப்பாடு செய்துள்ளார்.

பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் அவர் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். தான் நடத்தும் கூட்டங்களை காணொளியாக பதிவு செய்ய அதிகாரிகளை அனுப்பியதாகவும் அவர் கூறியுள்ளார்.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு பயணிகத்தில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்களுடன் இந்த கூட்டம் நடைபெற்றது.

அழைப்பு விடுக்கப்படாத நபர் ஒருவர் வந்து கூட்டத்தை காணொளியாக பதிவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக ராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.