விதுர விக்ரமநாயக்க ஒரு பைத்தியக்காரன்: மகிந்த பத்திரன

Report Print Steephen Steephen in அரசியல்

ராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க ஒரு பைத்தியக்காரன் என ஸ்ரீலங்கா பத்திரிகை சபையின் தலைவர் மகிந்த பத்திரன தெரிவித்துள்ளார்.

தனது முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார்.

விதுர விக்ரமநாயக்க போன்ற பைத்தியக்காரன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கை அறிக்கையை நடைமுறைப்படுத்த ஏன் மக்களிடம் ஆணையை கேட்டார் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்கவின் புதல்வரான விதுர விக்ரமநாயக்க, அரசாங்கம் கொண்டு வந்துள்ள 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.

மக்கள் இதற்காக வாக்களிக்கவில்லை எனவும் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கவே மக்களிடம் வாக்குகளை கோரியதாகவும் அவர் கூறியிருந்தார்.

ஒரு சிலர் தமது கைகளுக்கு அதிகாரங்களை பெறும் நோக்கில் 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை கொண்டு வந்துள்ளனரா என்ற சந்தேகம் தனக்கு இருப்பதாகவும், 20வது திருத்தச் சட்டம் என்பது மீண்டும் 18வது திருத்தச் சட்டத்திற்கு செல்வதாக இருந்தால், அது அரசாங்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறு விதுர விக்ரமநாயக்க, 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை வெளிப்படையாக விமர்சித்து வரும் நிலையில், ஆளும் கட்சிக்குள் அவருக்கு எதிரான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.