20ம் திருத்தச் சட்டம் குறித்த உச்ச நீதிமன்றின் தீர்ப்பு நாளை

Report Print Kamel Kamel in அரசியல்

உத்தேச 20ம் திருத்தச் சட்டம் குறித்த உச்ச நீதிமன்றின் தீர்ப்பு நாளைய தினம் அறிவிக்கப்பட உள்ளது.

20ம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றில் பல்வேறு தரப்பினர் வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகளை விசாரணை செய்த நீதிமன்றம், நாளைய தினம் இந்த மனுக்கள் குறித்த தீர்ப்பினை அறிவிக்க உள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் சபாநாயகர் மஹிந்த யாபாவிற்கு இந்த தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் அறிவிக்க உள்ளது.

இதேவேளை, 20ம் திருத்தச் சட்டம் தொடர்பில் எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வுகளின் போது விவாதம் செய்யப்பட உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.