எதிர்த் துருவங்களாக இருந்து ஒன்றாக இணைந்துள்ள தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒற்றுமை உடையுமா?

Report Print Banu in அரசியல்

பல்வேறு துருவங்களாக தேர்தல் களங்களில் நின்றவர்கள் திலீபன் விடயத்தில் ஒன்றிணைந்துள்ளனர்.

ஆனால் இது அடுத்த தேர்தல் வரைக்கும் நீடிக்குமா என்ற கேள்வி எழும்புகிறது என அரசியல் ஆய்வாளர் யதீந்திரா தெரிவித்துள்ளார்.

ஐபிசி தமிழ் ஊடகத்திற்கு இன்றையதினம் வழங்கிய செவ்வியில் கருத்து வெளியிடும் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

பல்வேறு துருவங்களாக தேர்தல் களங்களில் நின்றவர்கள் திலீபன் விடயத்தில் ஒன்றிணைந்துள்ளனர். ஆனால் இது அடுத்த தேர்தல் வரைக்கும் நீடிக்குமா என்ற கேள்வி எழும்புகிறது.

இதேவேளை இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக கொண்டுவரப்பட்டதே 13ஆவது திருத்தச்சட்டம். அது காங்கிரஸ் காலத்தில் கொண்டுவரப்பட்டது.

காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சியைத் தாண்டி இலங்கை தீர்வு விடயம் தொடர்பில் தமிழர்களின் தீர்வு தொடர்பில் எப்பொழுது எல்லாம் பேசப்படுகிறதோ அப்போது எல்லாம் 13ஆவது திருத்தம் பேசப்படுகின்றது.

ஆனால் அந்த விடயம் தொடர்பில் தமிழ் கூட்டமைப்பும் தமிழ் தரப்பினர், தமிழர்களின் விடயத்தில் இந்தியா தலையிட வேண்டும் என கூறுகின்றதே தவிர இது தொடர்பில் தெளிவான நிலைப்பாட்டை இது வரையில் இந்தியாவிடம் முன்வைக்கவில்லை என்று கூறியுள்ளார்.