அரசாங்கம் 20ம் திருத்தச் சட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும்: மனோ கணேசன்

Report Print Kamel Kamel in அரசியல்

உத்தேச 20ம் திருத்தச் சட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மனோ கணேசன், இது தொடர்பில் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

இலங்கையின் அமரபுர, ராமன்ய பீடங்கள், 20ம் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்து கட்சிகளையும் உள்ளடங்கிய தேசிய பொறிமுறைமை ஒன்றை உருவாக்கி அதன் ஊடாக புதிய அரசியல் அமைப்பினை உருவாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதே சாலச் சிறந்தது என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் முக்கிய பௌத்த பீடங்களான அமரபுர மற்றும் ராமன்ய பீடங்கள், உத்தேச 20ம் திருத்தச் சட்டம் தொடர்பில் இன்றைய தினம் தங்களது அதிருப்தியை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.