சீனப் பிரதிநிதிகளின் அண்மைய விஜயம் இரு நாடுகளின் உறவுகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது: நாமல்

Report Print Kamel Kamel in அரசியல்

சீனப் பிரதிநிதிகளின் அண்மைய இலங்கை விஜயமானது இரு நாடுகளினதும் உறவுகளை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டதன் மூலம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யாங் ஜியாச்சி தலைமையிலான உயர் மட்டக் குழுவினரின் இலங்கை விஜயமானது இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விஜயத்தின் மூலம் விஞ்ஞானம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் பொருளாதாரத் துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வலுப்படுத்தப்படும் எனவும், புதிய வாய்ப்புக்கள் உருவாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.