ரிசாட்டின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் கைது

Report Print Ajith Ajith in அரசியல்

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீனின் பாதுகாப்பு கடமையில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டமா அதிபரின் பணிப்பின்பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது புத்தளத்தில் இருந்து மன்னாருக்கு வாக்காளர்களை பேருந்துகளில் ஏற்றிச்செல்ல உதவியதாக கூறப்படும் கணக்காளரான அழகரட்ணம் மனோரஞ்சனும் அடங்குகிறார்.

கொழும்பு - கிருலப்பனை பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ரிசாட் பதியூதீன் பயன்படுத்திய இரண்டு கார்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் பயன்படுத்திய 2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையின் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

பொதுச்சொத்து துஸ்பிரயோக குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீனை கைதுசெய்ய பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையிலேயே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டு வாகனம் மற்றும் துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.