என்னால் தமிழ் மக்களை உசுப்பேற்றும் பேச்சுக்களையும் பேச முடியும்! வியாழேந்திரன்

Report Print Navoj in அரசியல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 36,000 பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் இருக்கின்றனர். 18,000 இளம் விதவைத் தாய்மார்கள் இருக்கின்றார்கள். 8,000இற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் இருக்கின்றார்கள். 52,000 பேருக்கு வீடுகள் இல்லை. இந்த நிலையில்தான் தேர்தல் காலத்தில் கோழிக்குஞ்சுகள், மற்றும் மதுபானப் போத்தல்கள் கொடுக்கும் செயற்பாடுகளிலிருந்து நாங்கள் எமது மக்களை மீட்டெடுத்திருக்கின்றோம் என இராஜங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

போரதீவுப் பற்று பகுதியில் இன்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாங்கள் மக்கள் எதிர்பார்ப்பு அரசியலூடாக கடந்த அரசியலுக்குச் சென்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர் ஆளும் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெறமாட்டார் என பலர் கருத்துத் தெரிவித்தார்கள்.

இந்நிலையில்தான் கடந்த தேர்தலில் ஆளும் கட்சியில் வெற்றிபெற்ற ஒரே தமிழன் நான் மாத்திரமே. அதற்கு இறைவனும், இரவு பகலாக எந்தவித எதிர்பார்ப்புக்களுமின்றிச் செயற்பட்ட முற்போக்குத் தமிழர் அமைப்பின் உறுப்பினர்களுமே காரணமாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 33,424 வாக்குகள் எமது கட்சிகுக் கிடைக்கப்பெற்றது. இதில் 2,500 வாக்குகள் குறைவாகக் கிடைத்திருந்தால் கிழக்கு மாகாணத்திலிருந்து ஒரு தமிழர் அமைச்சராகும் வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும். எனவே எமது கட்சிக்கு வாக்களித்த அத்தனை தமிழ் மக்ளுக்கும் இந்த வெற்றியை நான் சமர்ப்பிக்கின்றேன்.

நான் ஒரு தமிழ் ஆசியரியர் என்னால் புறனாநூறு, பற்றியும், தமிழ் மக்களை உசுப்பேற்றும் பேச்சுக்களையும் பேசமுடியும்.

ஆனால் இதுவரைகாலமும் உணர்ச்சி வார்த்தைகளையும், உசுப்பேற்றும் வார்கத்தைகளையும், பேசிப் பேசி மக்களை ஏமாற்றி வந்ததே எமது அரசியல் தலைவர்களின் போக்கா இருந்து வந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.