வெளிவிவகார அமைச்சர், பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையில் பேச்சுவார்த்தை

Report Print Kamel Kamel in அரசியல்

வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவிற்கும், இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் மொஹட் ஸாட் கத்தாக்கிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சில் இன்றைய தினம் குறித்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.

இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வது தொடர்பில் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை விஸ்தரித்தல் மற்றும் வலுப்படுத்திக் கொள்ளல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இந்த பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.