தமிழ் மக்கள், புலிகள் பற்றிய தகவல்களை வழங்கவில்லை – ரணில் விக்கிரமசிங்க

Report Print Kamel Kamel in அரசியல்
749Shares

தமிழ் மக்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றிய தகவல்களை வழங்கவில்லை என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் சாட்சியமளித்த போது அவர் நேற்று இதனைத் தெரிவித்துள்ளார்.

1983ம் ஆண்டு இனக் கலவரத்தின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றிய தகவல்களை மக்கள் வழங்கவில்லை எனவும், கலவரம் ஏற்பட்டு இரண்டு ஆண்டுகளின் பின்னரே புலிகள் பற்றிய தகவல்களை தமிழ் மக்கள் வழங்கத் தொடங்கினர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் பெண்கள் நிகாப் அணிவதை தடை செய்தால் முஸ்லிம் சமூகத்தினரும் தீவிரவாத சக்திகள் பற்றிய தகவல்களை வழங்க மாட்டார்கள் என தாம் கருதியதாகத் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே முஸ்லிம் பெண்கள் நிகாப் அணிவதனை தடை செய்யும் யோசனையை தாம் விரும்பவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிகாப் அணிய தடை விதிக்கப்பட்டால் அது முஸ்லிம்களின் உரிமைகளை முடக்குவதாக அர்த்தப்பட்டு சில வேளைகளில் முஸ்லிம்கள் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்கள் பற்றிய தகவல்களை அரசாங்கத்திற்கு வழங்காதிருக்கக்கூடிய சாத்தியங்கள் ஏற்படலாம் என தாம் கருதியதாகத் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் தொடர்பில் பல்வேறு தகவல்களை முஸ்லிம்கள் வழங்கியிருந்தனர் எனவும் அதன் அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கடப்பாடு பாதுகாப்பு தரப்பினரைச் சாரும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத்தாக்குதல் பற்றிய விபரங்கள் வெளியிடப்படாமை புலனாய்வுப் பிரிவின் பலவீனமேயாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் தமது அரசாங்கத்திற்கும் இடையில் பாரதூரமான முரண்பாடுகள் எதுவும் ஏற்பட்டிருக்கவில்லை எனவும் வழமையாக அரசாங்கங்களில் ஏற்படும் சிற்சில கருத்து முரண்பாடுகள் காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.