20வது திருத்தச் சட்டத்தை எதிர்க்கவில்லை - விமல் வீரவங்ச

Report Print Steephen Steephen in அரசியல்

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை ஆளும் கட்சியில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்க்கவில்லை என அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கவில்லை. சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பை முன்வைத்துள்ளனர். அதில் உள்ள சில விடயங்களை மாத்திரமே எதிர்க்கின்றனர்.

இதனை தவிர நாட்டு மக்களின் ஆணையில் ஜனாதிபதியாக பதவிக்கு வந்த ஜனாதிபதிக்கு, பொதுமக்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு நாட்டை முன்னேற்றி முன்நோக்கி கொண்டு செல்ல அதிகாரம் இருக்க வேண்டும் என்பது தொடர்பில் விவாதங்கள் இல்லை.

அதனை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். 20வது திருத்தச் சட்டத்தில் உள்ள சில வித்தியாசங்கள் சம்பந்தமாகவே கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன எனவும் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்த திருத்தச் சட்டம் தொடர்பாக தனக்கு தனிப்பட்ட ரீதியில் எந்த நிலைப்பாடுகளும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

20வது திருத்தச் சட்டம் தொடர்பாக ஆளும் கட்சியின் சில தரப்பினர் முன்வைத்துள்ள எதிர்ப்பு தொடர்பான தற்போதைய நிலைமை குறித்து நேற்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.