ஜனாதிபதி உட்பட முக்கியஸ்தர்களுக்கு பகிரங்க மரண அச்சுறுத்தல் விடுத்த நபரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

Report Print Steephen Steephen in அரசியல்
273Shares

ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் சிறைச்சாலை திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் சிலருக்கு பகிரங்கமாக மரண அச்சுறுத்தல் விடுத்த வழக்கின் இரண்டாவது சந்தேக நபரான பொடி லெசி என்ற அரும ஹந்தி ஜனித் மதுசங்க என்பவரை 90 நாள் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க காலி பிரதான நீதவான் ஹர்சன கெக்குனுவெல இன்று அனுமதி வழங்கியுள்ளார்.

குற்றவியல் விசாரணை திணைக்களம் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான உதவி பொலிஸ் அத்தியட்சகர் மெரில் ரஞ்சன் லமாஹோ நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்ததுடன் இரண்டாவது சந்தேக நபரை திணைக்களத்தில் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி கோரியுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் இதற்கு அனுமதியை வழங்கியுள்ளதாகவும் அவர் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.