நாடு முழுவதும் கொரோனா பரவியுள்ளது - ஐ.தே.கட்சி குற்றச்சாட்டு

Report Print Steephen Steephen in அரசியல்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவியுள்ளதாகவும் இதனால், முழு நாடும் பாதுகாப்பற்ற நிலைமைக்கு சென்றுள்ளமை தொடர்பில் அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

கொரோனா தொற்று நோய் நாடு முழுவதும் பரவியுள்ளதாகவும் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் ஆங்காங்கே கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டு வருவதாகவும் இதற்கு அரசாங்கத்தின் தலைவர்கள் முற்றாக பொறுப்புக் கூற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நாடு ஆபத்தான நிலைமைக்கு சென்றுக்கொண்டிருக்கும் போது அரசாங்கம் இது குறித்து பொறுப்பான தெளிவான அறிக்கை எதனையும் வெளியிடவில்லை. சுகாதார அமைச்சர் குறுகிய பதில்களை வழங்கி விட்டு, தவிர்த்து வருகிறார். சுகாதார துறையின் பிரதானிகள் ஊடக சந்திப்புகளை நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அறிய கிடைத்துள்ளது. மக்கள் உண்மையை அறிந்துக்கொள்ளும் விடயத்திற்கு தடைகளை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது எனவும் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

You may like this video