ரணில் மற்றும் மைத்திரி ஆகியோருக்கு அழைப்பாணை

Report Print Kamel Kamel in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

ரஸ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவினால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளில் சாட்சியமளிப்பதற்காக ரணில், மைத்திரிக்கு அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 19ம் திகதி ஆணைக்குழு எதிரில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் இராணுவத் தளபதி ரொசான் குணதிலக்க, முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர, ரவி கருணாநாயக்க மற்றும் ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கும் எதிர்வரும் 19ம் திகதி ஆணைக்குழு எதிரில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் பிரதமர் ரணில் மற்றும் முன்னாள் அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க மற்றும் ராஜித சேனாரட்ன ஆகியோர் இன்றைய தினம் அரசியல் பழிவாங்கல்கள் குறித்து விசாரணை நடாத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு எதிரில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.