கொரோனா தொற்று! மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அரசிடம் சஜித் கோரிக்கை

Report Print Murali Murali in அரசியல்

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால நிவாரணத் திட்டம் தொடங்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இதனை கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலினால் பாதிக்கப்பட்ட மினுவாங்கொட மற்றும் பிற பகுதி மக்களுக்கு எந்தவிதமான கொடுப்பனவும் அல்லது பொருள் நிவாரணமும் வழங்கப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் அலட்சியம் காரணமாக நாட்டில் இரண்டாவது கொரோனா அலை ஏற்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.