20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பிலான நாடாளுமன்ற விவாதம் குறித்து விசேட கூட்டம்

Report Print Kamel Kamel in அரசியல்

உத்தேச 20ம் திருத்தச் சட்டம் தொடர்பிலான நாடாளுமன்ற விவாதம் குறித்த கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது.

இந்த கூட்டம் இன்றைய தினம் பிற்பகல் 1.30 மணிக்கு சபாநாயகர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

இதேவேளை, 20ம் திருத்தச் சட்டம் தொடர்பில் கூடுதல் நேரம் விவாதம் நடாத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

நான்கு நாட்கள் 20ம் திருத்தச் சட்டம் குறித்து நாடாளுமன்றில் விவாதம் நடாத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.