ரிஷாட் பதியுதீனை பிடித்து இழுத்து வந்து கைது செய்ய வேண்டும்! டேன் பிரியசாத்

Report Print Gokulan Gokulan in அரசியல்

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை எவ்வாறு கண்டுபிடித்து கைது செய்ய வேண்டுமென்பது தொடர்பில் சிங்களே தேசிய அமைப்பின் தலைவர் டேன் பிரியசாத் பொலிஸாருக்கு செய்முறை ஒன்றை செய்து காட்டியுள்ளார்.

கடந்த பல தினங்களாக ரிஷாட் பதியதீனை கைது செய்யும் பொலிஸாரின் முயற்சி வெற்றியளிக்காத நிலையில், ரிஷாட் பதியுதீனின் டையை பிடித்து இழுத்து வந்து ஊடகங்களுக்கு முன் நிறுத்த வேண்டுமென டேன் பிரியசாத் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்திய அவர், மற்றுமொரு நபரின் முகத்திற்கு ரிஷாட் பதியுதீனின் முகம் பொறிக்கப்பட்ட முகமூடியை அணிவித்து, இந்த விடயத்தை செய்து காட்டியுள்ளார்.