அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்: விக்னேஸ்வரன் பகிரங்க அழைப்பு

Report Print Banu in அரசியல்

தமிழ் கட்சிகள் அனைத்தும் சட்டத்தரணி ஸ்ரீகாந்தாவின் தலைமையில் ஒன்றிணைந்து கூட்டாக செயற்படவேண்டும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.சி தமிழின் நிலவரம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

சட்டத்தரணி ஸ்ரீகாந்தா 40 வருட அனுபவமும், திறமையும் அதேநேரம் பணிவும் கொண்டவர். ஆகவே அனைத்து தமிழ் கட்சிகளும் அவரது தலைமையில் ஒன்றிணைந்து செயற்பட முன்வரவேண்டும். அவருடைய அணுகுமுறையின் காரணமாகவே தமிழ்த் தலைவர்கள் பலரும் ஒன்றிணைந்தனர்.

என்னை அனைவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் ஆனால் அவரை ஏற்றுக்கொள்வர் என்று கூறியுள்ளார்.