ரிஷாட் கைது விவகாரம் முஸ்லிம்களை சீண்டி பார்க்கும் செயல் : ஏ.எல்.எம். நஸீர்

Report Print Mubarak in அரசியல்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனைக் கைதுசெய்வதற்கு எடுக்கப்படும் முயற்சிகளை முஸ்லிம்களைப் சீண்டிப் பார்க்கும் செயற்பாடாகவே நோக்க வேண்டியுள்ளதாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவ் அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டின் ஆரம்ப வரலாற்றிலிருந்து இற்றை வரைக்கும் முஸ்லிம்கள் தேசப்பற்று உள்ளவர்களாகவே இருந்து வருகின்றனர். ஆளும் கட்சியோ அல்லது எதிர்க்கட்சியோ ஏதோ ஒரு பெரும்பான்மைக் கட்சிக்குத்தான் தங்களது ஆதரவையும் முஸ்லிம்கள் வழங்கி வருகின்றனர்.

ஆனால், தற்போதைய அரசு சிறுபான்மை மக்களுக்கு குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு போக்கையே கடைப்பிடித்து வருகின்றது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் மக்கள் தங்களுக்குப் பாரியதொரு ஆதரவைத் தரவில்லை என்ற காரணத்தால், இப்போது அதற்கான பழிவாங்கல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனைக் கைதுசெய்வதற்கு சட்ட மாஅதிபர் ஊடாகப் பிறப்பிக்கப்பட்ட ஆணை முஸ்லிம்களைப் சீண்டிப் பார்க்கும் ஒரு செயற்பாடாகவே நோக்க வேண்டியுள்ளது.

இது ஜனநாயக நாடு பழிவாங்கல் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.