20வது திருத்தச் சட்டத்தால் பிரதமர் மகிந்தவின் அதிகாரம் பலவீனப்படுத்தப்படும்!

Report Print Steephen Steephen in அரசியல்

உத்தேச 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் தன்னிச்சையான நிறைவேற்று அதிகாரமும், நாடாளுமன்றத்தையும், நீதிமன்றத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கக் கூடிய ஜனாதிபதி உருவாவார் என்பதுடன் அமைச்சரவை அதிகாரமற்றதாக காணப்படும் என பெங்கமுவே நாலக, முருத்தெட்டுவே ஆனந்த, எல்லே குணவங்ச ஆகிய தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி தெரிவித்துள்ளனர்.

மக்களின் அன்பை வெற்றிகொண்டுள்ள மகிந்த ராஜபக்சவின் அதிகாரம், ஸ்திரத்தன்மை என்பன பலவீனப்படுத்தப்படும் என்பதுடன் 20வது திருத்தச் சட்டத்தின் மூலம் எந்த சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதிக்கு அமைச்சரவையை மாற்றும் அதிகாரம் கிடைக்கும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

30ஆக குறைக்கப்பட்டுள்ள அமைச்சரவையின் எண்ணிக்கையில் மாற்றம் செய்வதில் உள்நோக்கம் இருக்கக் கூடும் எனவும் அவர் கூறியுள்ளனர்.

ஜனாதிபதியாக பதவி வகிக்கும் நபர், அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயற்படும் போது, நீதிமன்றத்திற்கு செல்லும் மக்களுக்கு இருக்கும் அதிகாரமும் இல்லாமல் ஆக்கப்படும்.

20வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவது குறித்து மறுமுறை சிந்தித்து பார்க்க வேண்டும் எனவும் தேரர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதிக்கு கடிதத்தை அனுப்பியுள்ள இந்த தேரர்கள், ஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசாங்கத்தை பதவிக்கு கொண்டு வருவதற்கான அரசியல் மற்றும் சமூக ரீதியான செயற்பாடுகளை முன்னெடுத்த முக்கிய தேரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.