இலங்கை வரும் அமெரிக்க இராஜாங்க செயலாளர்! எயார் பபுல் கொள்கையைக் கடைப்பிடிக்க திட்டம்

Report Print Ajith Ajith in அரசியல்

அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இலங்கைக்கு வரும்போதும் கொரோனா கட்டுப்பாட்டு நியதிகள் நடைமுறையை தாண்டி “எயார் பபுல்” என்ற கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டியேற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த வாரத்தில் சீனாவின் உயர் தூதுக்குழு ஒன்று இலங்கைக்கு வந்தபோது அந்த குழுவினர் எவ்வித பரிசோதனைகளும் இன்றி கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் இருந்து வெளியேறி நாட்டுக்குள் வந்தனர்.

குறித்த தூதுக்குழுவினர் கே-95 முகக்கவசங்களை அணிந்திருந்த நிலையில், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து கட்டுப்படுத்தப்பட்ட ஒரு இடத்தில் தங்கியிருந்து இலங்கையின் ஜனாதிபதியுடனும், பிரதமருடன் சந்திப்பை நடத்திச்சென்றனர்.

இதேநிலையே அமெரிக்க இராஜாங்க செயலாளர் இலங்கைக்கு எதிர்வரும் 28ம் திகதியன்று வரும்போதும் கடைப்பிடிக்கப்படவுள்ளது.

இலங்கைக்கு வரவுள்ள பொம்பியோ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையும் வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவையும் சந்திக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You may like this video