உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகிய முன்னாள் அமைச்சர் கபீர் ஹாஷிம்

Report Print Ajith Ajith in அரசியல்
29Shares

நல்லாட்சி அரசாங்கத்தில் பணியாற்றிய முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது பதவி விலகினர்.

அந்த நடவடிக்கை, அவரை பாதுகாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படவில்லை.ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை பாதுகாக்கும் நோக்கத்தை கொண்டது என்று முன்னாள் அமைச்சர் கபீர் ஹாஷிம் சாட்சியளித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் அவர் இந்த சாட்சியத்தை வழங்கியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக எதிர்க்கட்சி நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது. ஆனால் அது உண்மையில் அப்போதைய அரசாங்கத்திற்கு எதிரானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக ஐக்கிய தேசியக்கட்சியினரும் வாக்களித்திருந்தால், அது முழு அரசாங்கத்தை மாத்திரமல்ல. அந்த நேரத்தில் நாட்டின் ஸ்திரத்தன்மையையும் பாதித்திருக்கும் என்றும் விளக்கமளித்துள்ளார்.

இந்நிலைமையை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெளிவுப்படுத்தியதாகவும், அமைச்சர் ரிசாட் பதியுதீன் பதவி விலக விரும்பவில்லையெனவும்,எனவே தான் முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.