ரிசாட் தொடர்பில் ஹக்கீம் மற்றும் சஜித்திடம் வாக்குமூலம் பதிவு...

Report Print Ajith Ajith in அரசியல்
88Shares

சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்து மூன்று நாட்களாகியும் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனை இன்னும் காவல்துறையினால் கைதுசெய்ய முடியவில்லை.

இந்தநிலையில் ரிசாட் பதியுதீன், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டதாக கூறப்பட்டமை தொடர்பில் குற்றப்புலனாய்வுத் துறையினர் அவர்கள் இருவரிடமும் நேற்று வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டனர்.

எனினும் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் தகவல் வழங்கிய ரவூப் ஹக்கீம், தம்முடன் பதியுதீன் கடந்த ஒக்டோபர் 10ஆம் திகதி தொலைபேசியில் தொடர்புகொண்டதாக கூறினார்.

ரிசாட் பதியுதீன் விரைவில் தமது விடயத்தில் முடிவு ஒன்றை எடுப்பார் என்று எதிர்ப்பார்பதாக கூறிய ஹக்கீம் பெரும்பாலும் அவர் சரணடைந்தால், பிணையில் செல்ல வாய்ப்பிருப்பதாக குறிப்பிட்டார்.