மொஹான் பீரிஸ் உட்பட புதிய ராஜதந்திர அதிகாரிகளுக்கு வாழ்த்து கூறிய பிரதமர்

Report Print Steephen Steephen in அரசியல்
149Shares

வெளிநாடுகளுக்கான இலங்கை ராஜதந்திர அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள நான்கு பேர் அலரி மாளிகையில் பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளனர்.

நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைப்புக்கான இலங்கை இலங்கை நிரந்தர பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள மொஹான் பீரிஸ், சீனாவுக்கான இலங்கையின் புதிய தூதுவர் கலாநிதி பாலித கோஹேன, ஜப்பானுக்கான இலங்கையின் புதிய தூதுவர் சாஜீவ் குணசேகர, ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்திர பிரதிநிதி சீ.ஏ.சந்திரபிரேம ஆகியோர் பிரதமரை சந்தித்தனர்.

வெளிநாடுகளில் ராஜதந்திர சேவைகளுக்கு செல்லும் இந்த அதிகாரிகளுக்கு பிரதமர் தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டுள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்த ராஜதந்திர அதிகாரிகள் இன்னும் சில தினங்களில் ராஜதந்திர சேவைகளுக்காக வெளிநாடுகளுக்கு செல்ல உள்ளனர்.

ராஜதந்திர அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளவர்களில் மொஹான் பீரிஸ், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தின் கீழ் முன்னாள் பிரதம நீதியரசராகவும் சட்டமா அதிபராகவும் கடமையாற்றியவர்.

அவுஸ்திரேலியரான கலாநிதி பாலித கோஹேனவும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் கீழ் முக்கிய அரச பதவிகளை வகித்த நபர் என்பது குறிப்பிடத்தக்கது.