அமெரிக்க உடன்படிக்கையை நிறைவேற்றவா 20வது திருத்தச் சட்டம்: கேள்வி எழுப்பும் சிங்கள தேசிய அமைப்புகள்

Report Print Steephen Steephen in அரசியல்

அமெரிக்காவின் எம்.சீ.சீ உடன்படிக்கை கைச்சாத்திடும் அரசியலமைப்பு ரீதியான தேவைக்காகவா ஆளும் கட்சியின் தரப்பினர் 20வது திருத்தச் சட்டத்தில் இரண்டு விடயங்கள் தொடர்பாக தற்காலை செய்துக்கொள்ளும் அளவுக்கு குரல் கொடுக்கின்றனரா என சிங்கள தேசிய அமைப்புகள் கேள்வி எழுப்பியுள்ளன.

ஜனாதிபதியின் அதிகாரங்கள் வலுப்படுத்தப்படுதை எவரும் எதிர்க்கவில்லை என்றாலும் இந்த இரண்டு விடயங்கள் சம்பந்தமாக அரசாங்கம் தனது கௌரவத்தை புறந்தள்ளி விட்டு குரல் கொடுப்பது குறித்து சிங்கள தேசிய அமைப்புகள் தமது எதிர்ப்பை முன்வைத்துள்ளன.

இது சம்பந்தமாக சிங்கள தேசிய அமைப்புகள் ஒன்றியத்தின் பிரதிநிதியான மருத்துவர் வசந்த பண்டார நீண்ட தெளிவான விளக்கம் ஒன்றை முன்வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்ற பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்படுவது உட்பட 20வது திருத்தச் சட்டத்தில் உள்ள சில விடயங்களை சிங்கள தேசிய அமைப்புகள் எதிர்த்து வருகின்றன.

இதன் காரணமாக 20வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பதிலாக புதிய அரசியலமைப்புச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என அந்த அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.