நீதிமன்றிற்கு அருகாமையில் வந்து சென்றாரா ரிசாட் பதியூதீன்?

Report Print Kamel Kamel in அரசியல்

குற்ற விசாரணைப் பிரிவினரால் இதுவரையில் கைது செய்ய முடியாதுள்ள முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீன், சில நாட்களுக்கு முன்னர் நீதிமன்றிற்கு அருகாமையில் வந்து சென்றுள்ளார்.

தம்மை கைது செய்வதனை தடுக்கக் கோரி நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்வதற்கான ஆவணத்தில் கையொப்பமிடுவதற்காக ரிசாட், சட்டத்தரணி காரியாலயமொன்றுக்கு சென்றிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.

தாம் கைது செய்யப்படுவதனை தடுக்குமாறு கோரி சட்டத்தரணிகள் ஊடாக ரிசாட் தாக்கல் செய்த ரீட் மனு கடந்த 15ம் திகதி தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்தல் மற்றும் தேர்தல் சட்டங்களை மீறியமை ஆகிய குற்றச்சாட்டின் அடிப்படையில் ரிசாட்டை கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் வழங்கியுள்ளார்.

ரிசாட்டை கைது செய்யும் நோக்கில் குற்ற விசாரணைப் பிரிவினர் சில காவல்துறை குழுக்களை ஈடுபடுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You may like this video