ரிசாட் எங்கிருக்கின்றார் என அரசாங்கத்தில் உள்ளவர்களின் வீடுகளில் தேடுங்கள் - விஜயகலா

Report Print Kamel Kamel in அரசியல்

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீன் எங்கிருக்கின்றார் என அராசங்கத்தில் உள்ளவர்களின் வீடுகளில் தேடிப்பாருங்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவியலாளர்: உங்களது வீட்டில் இந்த நாட்களில் யார் இருக்கின்றார்?

விஜயகலா: ஏன்

ஊடகவியலாளர்: இல்லை, பதியூதீன் அமைச்சர் இருக்கின்றாரா?

விஜயகலா: அது எனக்குத் தெரியாது, அது அவரிடம் கேளுங்கள்

ஊடகவியலாளர்: எல்லா இடங்களிலும் தேடுகின்றார்கள் அவரைக் காணவில்லை அதுதான் உங்கள் வீட்டில் ஏதும் இருக்கின்றாரா என கேட்டோம்

விஜயகலா: ஏன், எங்களது வீட்டுக்கு வர யாருக்கு உரிமையுண்டு எனது அனுமதியின்றி வீட்டுக்குள் வர முடியாது அல்லவா? நீங்கள் அரசாங்கத்தின் உள்ளவர்களின் வீடுகளுக்குச் சென்று தேடிப்பாருங்கள்

ஊடகவியலாளர்: யாரின் வீட்டில் இருக்கக் கூடும்

விஜயகலா: எனக்குத் தெரியாது

ஊடகவியலாளர்: உங்களுக்கு ஏதேனும் தெரிந்திருக்கின்றது அதுதான் சிரித்துக்கொண்டு பதிலளிக்கின்றீர்கள்

விஜயகலா: இல்லை, எனக்கு வேறு வேலையில்லையா இது பற்றி தேடுவதற்கு, ரிசாட் பதியூதீன் எம்.பி.யிடம் எங்கு இருக்கின்றார் என தொலைபேசி மூலம் கேட்டுப் பாருங்கள்

ரிசாட்டை கைது செய்ய முடியாதது அரசாங்கத்தின் பாதுகாப்புதான் என்ன? இது ஓர் சிறிய நாடு இந்த நாட்டில் ஒருவரை பிடிப்பது கடினமானதல்ல, பொலிஸாரிடம் தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு கேட்டுப்பாருங்கள் என விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

You may like this video