ஜப்பான் பிரதமருக்கு கடிதமொன்றை எழுதியுள்ள முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க

Report Print Ajith Ajith in அரசியல்

ஜப்பானின் நிதியளிக்கப்பட்ட இலகு தொடருந்து திட்டம் நடப்பு அரசாங்கத்தினால் நிறுத்தப்பட்டமை காரணமாக ஜப்பானுக்கு ஏதேனும் அசௌகரியங்கள் ஏற்பட்டால் அதற்காக மன்னிப்புக் கோருவதாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரணவக்க, ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் ஜப்பானிய ஒத்துழைப்புடன் கொழும்பு மற்றும் புநககர் பகுதிகளுக்கு முன்னெடுக்கப்படவிருந்த இலகு தொடருந்து திட்டம் நடப்பு அரசாங்கத்தினால் நிறுத்தப்பட்டுள்ளது.

இதன்காரணமாக ஜப்பானுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்காக இலங்கை மக்கள் சார்பாக அந்த நாட்டின் அரசாங்கத்திடமும், ஜப்பான் மக்களிடமும் மன்னிப்பு கோருவதாக சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

2008 - 2012ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஜெய்காவின் நிதியுதவியில் பேருந்து நவீனமயமாக்கல், தொடருந்து மின்மயமாக்கல், இரட்டை வரி தொடருந்து சேவை என்பன அடையாளம் காணப்பட்டன.

அதைத் தொடர்ந்து, 2015-16 ஜப்பானிய மற்றும் இலங்கை வல்லுநர்கள் கூட்டாக மேற்கொண்ட இரண்டாவது விரிவான ஆய்வில் உயர்ந்த தாக்க மூலோபாய திட்டங்கள் அடையாளம் காணப்பட்டன.

எனினும் ஜப்பானிய அரசாங்கத்துக்கு நன்கு தெரிந்த காரணங்களால் இந்த திட்டம் இலங்கையின் நடப்பு அரசாங்கத்தினால் நிறுத்தப்பட்டுள்ளதாக பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கைக்கு ஜப்பான் வழங்கிய உதவிகளையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.