ஜனாதிபதி தலைமையில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை சந்திப்பு

Report Print Kamel Kamel in அரசியல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளைய தினம் சந்திப்பு ஒன்றை நடாத்த உள்ளனர்.

நாளைய தினம் மாலை 6.30 மணியளவில் இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

உத்தேச 20ம் திருத்தச் சட்டம் தொடர்பில் எதிர்வரும் 21ம் திகதி விவாதம் நடாத்தப்பட உள்ளது.

இந்த விடயம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விசேட கூட்டத்தை நடத்தவுள்ளதாக தெரியவருகிறது.