ரிசாட் பதியூதீன் எதிர்வரும் 20ஆம் திகதியின் பின்னர் வெளியே வருவார்! அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

Report Print Kamel Kamel in அரசியல்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியூதீன் எதிர்வரும் 20ஆம் திகதியின் பின்னர் வெளியே வருவார் என கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுச்சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்தமை மற்றும் தேர்தல் சட்டங்களை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் ரிசாட்டை கைது செய்ய சட்ட மா அதிபர், பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

எனினும், கைது செய்வதற்காக சில பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்ட போதும் இதுவரையில் ரிசாட்டை கைது செய்ய முடியவில்லை.

இந்த நிலையில், ரிசாட் பதியூதீன் எதிர்வரும் 20ஆம் திகதியின் பின்னர் வெளியே வருவார் என அவரது கட்சியின் பிரதித் தலைவர் சட்டத்தரணி என்.எம்.சஹிட் தெரிவித்துள்ளார்.

தம்மை கைது செய்வதனை இடைநிறுத்துமாறு சட்டத்தரணிகள் ஊடாக ரிசாட் தாக்கல் செய்த மனு எதிர்வரும் 20ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.