20ம் திருத்தச் சட்டம் குறித்த வாக்கெடுப்பு இன்று, எதிர்க்கட்சியின் சிலர் ஆதரவாக வாக்கக்கூடிய சாத்தியம்

Report Print Kamel Kamel in அரசியல்
207Shares

20ம் திருத்தச் சட்டம் குறித்த நாடாளுமன்ற வாக்கெடுப்பு இன்றைய தினம் மாலை நடைபெறவுள்ளது.

20ம் திருத்தச் சட்டம் தொடர்பில் நேற்றைய தினம் நடைபெற்ற நாடாளுமன்ற விவாதம் இன்றைய தினமும் மேற்கொள்ளப்பட உள்ளது.

இன்று முற்பகல் 10.00 மணி முதல் இரவு 7.30 வரையில் விவாதம் நடாத்தப்பட உள்ளது.

20ம் திருத்தச் சட்டத்தை தோற்கடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர்.

எனினும், எதிர்க்கட்சியின் சிலர் 20ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க இணங்கியுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.