ஜனாதிபதியின் உறுதிமொழிக்கு அமைய விமல், உதய, வாசு 20க்கு ஆதரவாக வாக்களிக்கத் தீர்மானம்

Report Print Kamel Kamel in அரசியல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உறுதிமொழிக்கு அமைய அமைச்சர்களான உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் 20ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.

எதிர்வரும் நவம்பர் மாதம் புதிய அரசியல் அமைப்பு சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் அதில் இரட்டைக் குடியுரிமை குறித்த சரத்து திருத்தி அமைக்கப்படும் எனவும் ஜனாதிபதி உறுதிமொழி வழங்கியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான வீரசுமன வீரசிங்க மற்றும் பேராசிரியர் திஸ்ஸ விதாரன உள்ளிட்டவர்களும் 20ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிப்பதாக உறுதி வழங்கியுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.